சிறந்தது அன்னபேதி செந்தூரம். இது நாட்டுமருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள் பக்குவமாக பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான மருந்து. இந்த அன்னபேதி செந்தூரத்தை 200 மில்லி கிராம் அதாவது 4 சிட்டிகை அளவு தேனில் குழைத்து காலை, இரவு என்று இரண்டு வேளைகளில் தொடர்ந்து சாப்பிடும்பொழுது மிக அற்புதமான பலன் கிடைக்கும். உடம்பில் இரத்த ஓட்ட அளவு அதிகமாகும். அதேபோல் அயச்செந்தூரம், அயக்காந்த செந்தூரம், காந்த செந்தூரம். இவையெல்லாமே இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய செந்தூரங்கள். இன்னும் சில நேரங்களில் பஸ்பங்களையும் கையாளக்கூடிய தன்மை உண்டு. பஸ்பங்களில் விசேசமானது சிலாசத்து பஸ்பம், முத்துச்சிப்பி பஸ்பம், குங்கிலிய பஸ்பம் போன்றவை இரத்தத்தை அதிகப்படுத்தும். அதாவது எலும்பை வலுப்படுத்தி, எலும்புக்கு உள்ளே இருக்கக்கூடிய இரத்தத் தட்டுக்களை அதிகப்படுத்தி அதனடிப்படையில் இரத்த செல்களை அதிகப்படுத்தக்கூடிய தன்மையை பஸ்பங்கள் செய்யும். இந்த பஸ்பம், செந்தூரங்கள் போன்றவற்றை பக்குவமாக, பாரம்பரியமாக இருக்கக்கூடிய மருத்துவர்களின் மேற்பார்வையில் தனிநபர்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
மேலும் மிகச் சாதாரனமாக இரத்தத்தை அதிகப்படுத்த ஒரு அற்புதமான விசயம் என்னவென்றால் வெட்பாலை விதை. இந்த வெட்பாலை விதை என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த வெட்பாலை விதையை வாங்கி நன்றாக தண்ணீரில் அவித்தால் நெல் அவித்தது போல் இருக்கும். அதில் மேல் இருக்கக்கூடிய மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக்கூடிய பருப்பை தேனோடு சேர்த்து நன்றாக காய்ச்சி வைத்துக்கொண்டு அதை சிரப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு அந்த வெட்பாலைத்தேனை காலை, இரவு என இரண்டு வேளை ஒரு வாரம் சாப்பிட்டால் போதும் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு குறைவாக இருந்தாலும் ஒரே சீரான சமநிலைக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு அற்புதமான விசயம் சித்தர்கள் சொன்ன வெட்பாலை விதையில் இருக்கிறது. ஆக இந்த வெட்பாலை விதையை தேனாக செய்து சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும்.
இரத்த சோகை வரும்பொழுது சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நகர்புற வாழ்க்கையில் நிறைய நபர்களுக்கு கண்டிப்பாக இரத்த சோகை சார்ந்துதான் சிறுநீரக நோய்கள் வருகிறது.
-தொடரும்
மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 7666